ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து: 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகத்தில் திருத்தம்


ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து:  12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகத்தில் திருத்தம்
x
தினத்தந்தி 22 July 2020 12:47 PM IST (Updated: 22 July 2020 12:47 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து: 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகத்தில் திருத்தம்

புதுடெல்லி

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) தனது 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகத்தில் ஒரு அத்தியாயத்தைத் திருத்தியது, 370 வது பிரிவை ரத்து செய்வது மற்றும் ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாத அரசியல் குறித்த உள்ளடக்கத்தை நீக்குவது பற்றிய ஒரு பகுதியை சேர்த்தது.

'சுதந்திர இந்தியாவின் அரசியல்' என்ற பாடநூல் 2020-21 அமர்வுக்கு திருத்தப்பட்டது, அந்த தலைப்பு 'பிராந்திய அபிலாஷைகள்' அத்தியாயத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5, 2019 அன்று, ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை 370 வது பிரிவு பாராளுமன்றம் எவ்வாறு ரத்து செய்தது மற்றும் மாநிலத்தை லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என  இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது என அது இருக்கும்.

திருத்தப்பட்ட அரசியல் அறிவியல் பாடநூல் காஷ்மீரில் பிரிவினைவாதிகளின் வகைகளை பிரிவினைவாதம் மற்றும் அதர்கு அப்பால்’ அத்தியாயத்தில் விளக்கிய ஒரு பகுதியையும் நீக்கியது.

பாடப்புத்தக மாற்றத்தில் ஜம்மு-காஷ்மீரில் 2002 முதல் காணப்பட்ட முன்னேற்றங்களும் அடங்கும், மேலும் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா மற்றும் பி.டி.பி தலைவர் மெஹபூபா முப்தியின் பற்றிய தகவல்களும் உள்ளன



Next Story