கொரோனா நோயாளியை கற்பழித்த அரசு மருத்துவமனை டாக்டர்


கொரோனா நோயாளியை கற்பழித்த அரசு மருத்துவமனை டாக்டர்
x
தினத்தந்தி 22 July 2020 10:56 PM IST (Updated: 22 July 2020 10:56 PM IST)
t-max-icont-min-icon

உத்தர பிரதேசத்தில் கொரோனா சிகிச்சை பெற்ற நோயாளியை அரசு மருத்துவமனை டாக்டர் கற்பழித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

அலிகார்,

உத்தர பிரதேசத்தின் அலிகார் நகரில் தீன்தயாள் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.  நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த நிலையில், இந்த மருத்துவமனையில் அதற்கென தனி வார்டு அமைக்கப்பட்டது.

இதில், கொரோனா பாதித்த நபர்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுபோன்று வந்த பெண் ஒருவரை டாக்டர் கற்பழித்து உள்ளார்.  இதுபற்றிய புகார் போலீசில் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு டாக்டர் மீது 376 2(இ) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  போலீசார் டாக்டரை கைது செய்தனர்.  முதல் மந்திரி அலுவலகம் இந்த வழக்கை விசாரிக்க குழு ஒன்றை உருவாக்கி உள்ளது.

Next Story