ஹெலிகாப்டரில் இருந்து டாங்கிகளை அழிக்கும் துருவஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி


ஹெலிகாப்டரில் இருந்து டாங்கிகளை அழிக்கும் துருவஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி
x
தினத்தந்தி 23 July 2020 12:49 AM IST (Updated: 23 July 2020 12:49 AM IST)
t-max-icont-min-icon

இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் அதிநவீன ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு கட்ட சோதனைக்கு பிறகு இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன.

பாலசோர்,

அந்த வகையில் எதிரிகளின் ராணுவ டாங்கிகளை தாக்கி அழிக்கும் 3வது தலைமுறை ஏவுகணை அமைப்பான ஹெலினா, இந்திய ராணுவத்தில் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து பருவ காலங்களிலும், பகல் மற்றும் இரவிலும் தாக்குதல் நடத்த முடியும். தற்போது அதனை மேம்படுத்தி துருவஸ்திரா என்ற ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.

இதனைக் கொண்டு எதிரிகளின் ராணுவ டாங்கிகள் மீது நேர் எதிராகவும், மேல் நோக்கியபடி இருந்தும் தாக்குதல் நடத்த முடியும். இந்த ஏவுகணை 500 மீட்டர் முதல் 7 கி.மீ. தூரம் வரை சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டது.

இந்த நிலையில் ஒடிசா மாநிலம் பாலசோர் நகரில் துருவஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

கடந்த 15 மற்றும் 16 தேதிகளில் இந்த சோதனை நடந்தப்பட்டதாகவும் ஹெலிகாப்டர் இல்லாமல் துரு வஸ்திரா ஏவுகணை சோதனை செய்து பார்க்கப்பட்டதாகவும் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

Next Story