இந்தியாவில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அமெரிக்க நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
புதுடெல்லி,
அமெரிக்க-இந்திய வர்த்தக கவுன்சிலின் இந்தியா ஐடியா மாநாடு காணொலி முறையில் நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அமெரிக்க நிறுவனங்களுக்கு அவர் அழைப்பு விடுததார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இன்று உலக நாடுகளின் நம்பிக்கை இந்தியாவை நோக்கி இருக்கிறது. ஏனெனில் வெளிப்படைகள், வாய்ப்புகள் மற்றும் தெரிவுகளை இந்தியா வழங்கி வருகிறது. இதுபற்றி விரிவாக செல்ல வேண்டுமானால் மக்களிலும், நிர்வாகத்திலும் இந்தியா வெளிப்படையை கொண்டாடுகிறது.
இந்தியா, வாய்ப்புகளின் ஒரு நிலமாக உருவெடுத்து வருகிறது. இதற்கு உதாரணமாக தொழில்நுட்பத்துறையை கூறலாம். சமீபத்தில் இந்தியாவில் இருந்து ஒரு சுவாரசியமான அறிக்கை வெளிவந்தது. அதாவது நகரப்பகுதிகளைவிட கிராமப்பகுதிகளில் இணையதளம் பயன்படுத்துவோர் அதிகமாக உள்ளனர்.
கொரோனா வைரஸ் பொருளாதார விரிதிறனின் முக்கியத்துவத்தை உணர்த்தி இருக்கிறது. உள்நாட்டு பொருளாதார திறன்களை வைத்தே இதை சாதிக்க முடியும். அதாவது உற்பத்தி, நிதி அமைப்பின் ஆரோக்கியத்தை மீட்டெடுத்தல், மற்றும் சர்வதேச வர்த்தகத்தின் பல்வகைப்படுத்தல் ஆகும்.
இந்திய பொருளாதாரம் மேலும் வெளிப்படையாகவும், சீர்திருத்தம் சார்ந்தும் அமைப்பதற்கு கடந்த 6 ஆண்டுகளில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது. வெளிப்படையான சந்தைகள் என்றால், கூடுதல் வாய்ப்புகள் ஆகும்.
இதை பயன்படுத்தி இந்தியாவின் சுகாதாரம், உள்கட்டமைப்பு, ராணுவம், எரிசக்தி, விவசாயம் மற்றும் இன்சூரன்ஸ் துறைகளில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
இந்த மாநாட்டில் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், ‘அமெரிக்கா உள்பட உலகின் பல்வேறு நாடுகளின் நம்பிக்கையை இந்தியா பெற்று உள்ளது. சர்வதேச வினியோக சங்கிலியை சீனாவிடம் இருந்து இந்தியா எடுத்துக்கொள்ள முடியும். மேலும் சீனாவை சார்ந்திருப்பதையும் குறைத்துக்கொள்ள முடியும்’ என்று தெரிவித்தார்.
இந்தியாவும், அமெரிக்காவும் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள், உலகளாவிய சக்திகள் மற்றும் நல்ல நண்பர்கள் என்று கூறிய பாம்பியோ, நாங்கள் இருதரப்பு அடிப்படையில் மட்டும் பேசாமல், சிறந்த நட்பு அடிப்படையிலும் பேசுவோம் எனக்கூறினார். டிரம்பின் வெளியுறவு கொள்கையின் முக்கிய தூணாக இந்தியா விளங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story