உறுப்பினர், ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு; ஜார்க்கண்ட் சட்டசபை செயலகத்திற்கு சீல்
உறுப்பினர், ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் ஜார்க்கண்ட் சட்டசபை செயலகத்திற்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.
ராஞ்சி,
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ஜார்க்கண்டிலும் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. ஜார்க்கண்ட் சட்டசபையில் உறுப்பினர்கள் மற்றும் சட்டசபை செயலகத்தில் பணியாற்றும் சில ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என முடிவுகள் வெளிவந்தன.
இதனை தொடர்ந்து ஜார்க்கண்ட் சட்டசபை செயலகம் சீல் வைக்கப்பட்டு உள்ளது. வருகிற 27ந்தேதி வரை மூடப்பட்டு இருக்கும். கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெறும். அதன்பின்னரே செயலகம் திறப்பு பற்றி முடிவு செய்யப்படும்.
இதேபோன்று, சட்டசபை குழு கூட்டங்கள் அனைத்தும் வருகிற 31ந்தேதி வரை தற்காலிக ரத்து செய்யப்படுகின்றன. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என அரசு அறிவிப்பு தெரிவிக்கின்றது.
Related Tags :
Next Story