காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் பெண் படுகாயம்
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் குவாஸ்பா செக்டாரின் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய நிலைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தியது
ஜம்மு,
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் குவாஸ்பா செக்டாரின் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய நிலைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. ரஜோரி மாவட்டத்திலும் நேற்று முன்தினம் இந்த அத்துமீறிய தாக்குதலை பாகிஸ்தான் அரங்கேற்றியது.
இதற்கிடையே குப்வாரா மாவட்டம் தங்தார் செக்டாரில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஒரு பெண், துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடனே இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தனர். பூஞ்ச் மாவட்டம் பாலகோட் பகுதியில் கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானின் தாக்குதலுக்கு 3 பேர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

Related Tags :
Next Story