தேசிய செய்திகள்

எனது எச்சரிக்கையை கேட்க மறுக்கிறார்கள் ; மத்திய அரசு மீது ராகுல் காந்தி பாய்ச்சல் + "||" + Kept warning, they rubbished it: Rahul Gandhi slams govt over China, Covid situation

எனது எச்சரிக்கையை கேட்க மறுக்கிறார்கள் ; மத்திய அரசு மீது ராகுல் காந்தி பாய்ச்சல்

எனது எச்சரிக்கையை கேட்க மறுக்கிறார்கள் ; மத்திய அரசு மீது ராகுல் காந்தி பாய்ச்சல்
கொரோனா குறித்தும், இந்திய பொருளாதாரம் குறித்தும் நான் தொடர்ந்து எச்சரித்து வந்தேன்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை என்று மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,

சீனாவுடனான லடாக் எல்லை பிரச்சினையில் மத்திய அரசின் அணுகுமுறையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தொடர்ந்து குறை கூறி வருகிறார். இது தொடர்பாக அவர் ஏற்கனவே 2 வீடியோக்களை வெளியிட்டார். அதில், பிரதமர் மோடி மீது அவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பாரதீய ஜனதா தலைவர்கள் பதிலடி கொடுத்தனர்.

ராகுல் காந்தி தொடர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய அரசை விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார். ராகுல் காந்தி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- கொரோனா குறித்தும், இந்திய பொருளாதாரம் குறித்தும் நான் தொடர்ந்து எச்சரித்து வந்தேன்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை , பேரழிவு ஏற்பட்டது.  தற்போது சீனா குறித்தும் எச்சரித்து வருகிறேன்;  இதையும் அவர்கள் கேட்க மறுக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. குணம் அடைந்தவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படுமா? ; ஐசிஎம்ஆர் ஆய்வு செய்வதாக மத்திய அரசு தகவல்
இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை கிட்டதட்ட 60 லட்சத்தை நெருங்கியுள்ளது.
2. அண்டை நாடுகளுடனான உறவை சிதைக்கிறார்: பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
அண்டை நாடுகளுடனான உறவை பிரதமர் மோடி அழித்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
3. நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பிக்கள், பிரதமர் மோடியுடன் சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியை திமுக எம்.பிக்கள் திடீரென சந்தித்துப்பேசினர்.
4. வேளாண் மசோதாவுக்கு மாநிலங்களவையில் திமுக கடும் எதிர்ப்பு
வேளாண்மை மாநில அரசின் பட்டியலில் இருப்பதால் மத்திய அரசுக்கு சட்டம் கொண்டுவர அதிகாரமே இல்லை என திமுக தெரிவித்துள்ளது.
5. இந்தியாவில் நடப்பு ஆண்டு சாலை விபத்துக்கள் 35 சதவிகிதம் குறைவு
இந்தியாவில் நடப்பு ஆண்டு சாலை விபத்துக்கள் 35 சதவிகிதம் குறைந்து இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.