மத்திய பிரதேச ஆளுநராக ஆனந்திபென் படேலுக்கு கூடுதல் பொறுப்பு


மத்திய பிரதேச ஆளுநராக ஆனந்திபென் படேலுக்கு கூடுதல் பொறுப்பு
x
தினத்தந்தி 24 July 2020 8:36 PM IST (Updated: 24 July 2020 8:36 PM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேச ஆளுநராக ஆனந்திபென் படேலுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

போபால்,

மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் (வயது 85) கடந்த செவ்வாய்க்கிழமை காலமானார். நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  அவர் காலமானார்.

லால்ஜி  டாண்டன் மறைந்ததையடுத்து, மத்திய பிரதேச ஆளுநர் பொறுப்பு , உத்தர பிரதேச ஆளுநராக உள்ள ஆனந்திபென் படேலுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படும் வரை ஆன்ந்திபென் பட்டேல் ஆளுநர் பொறுப்பை கவனிப்பார் என்று ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Next Story