ராஜஸ்தானில் காங்.ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி: ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு


ராஜஸ்தானில் காங்.ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி: ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 24 July 2020 4:27 PM GMT (Updated: 24 July 2020 5:02 PM GMT)

ராஜஸ்தானில் காங்.ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வது தெளிவாக தெரிகிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராக துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். இதனால், ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா காலத்திலும் ராஜஸ்தான் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.  ராஜஸ்தானில் சட்டமன்றத்தை உடனே கூட்ட வேண்டும் என்று முதல்வர் அசோக் கெலாட் ஆளுநரிடம் முறையிட்டு வருகிறார். ஆனால், ஆளுநர் இன்னும் பிடிகொடுக்கவில்லை.

 இந்த நிலையில், ராஜஸ்தானில் உடனே சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி இது பற்றி கூறியிருப்பதாவது: சட்டம் மற்றும் அரசியல் அமைப்பின்படி நாட்டில் ஆட்சி நடக்கிறது.

மக்கள் உத்தரவுப்படி அரசுகள் அமைக்கப்பட்டு ஆட்சி  செய்கின்றன. ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக சதி செய்வது தெளிவாகியுள்ளது. ராஜஸ்தானில் வசிக்கும் 8 கோடி மக்களை இழிவுபடுத்தும் செயல் இதுவாகும்.  ஆளுநர் கண்டிப்பாக சட்டமன்றத்தை கூட்ட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே நாட்டு மக்கள் மத்தியில் உண்மை வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story