மராட்டிய மாநிலத்தில் மேலும் 9,615 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


மராட்டிய மாநிலத்தில் மேலும் 9,615 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 24 July 2020 10:16 PM IST (Updated: 24 July 2020 10:16 PM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மாநிலத்தில் இன்று மேலும் 9,615 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் இன்று 9,615 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,57,117 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 278 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, மராட்டிய மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,132 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மாநிலம் முழுவதும் 5,714 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,99,967 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,44,018 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மராட்டிய மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தலைநகர் மும்பையில் இன்று மேலும் 1,057 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மும்பையில் பாதிப்பு எண்ணிக்கை 1,06,980 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை மராட்டிய மாநிலத்தில் 17,87,306 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story