தேசிய செய்திகள்

மே.வங்காளத்தில் இன்று முழு ஊரடங்கு: சாலைகள் வெறிச்சோடின + "||" + West Bengal: Streets wear a deserted look in Siliguri amid #COVID19 induced lockdown.

மே.வங்காளத்தில் இன்று முழு ஊரடங்கு: சாலைகள் வெறிச்சோடின

மே.வங்காளத்தில் இன்று முழு ஊரடங்கு:  சாலைகள் வெறிச்சோடின
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மேற்கு வங்காளத்தில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வாரத்தில்  இரண்டு நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

அதன்படி, சனிக்கிழமையான இன்று மேற்கு வங்காளம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், வாகனங்கள் போக்குவரத்து எதுவும் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து பிற காரணங்களால் வெளியே வந்தவர்களை போலீசார் செல்ல அனுமதிக்கவில்லை.  மேற்கு வங்காளத்தில் அடுத்த ஊரடங்கு வரும் 29 ஆம் தேதி கடைபிடிக்கப்பட உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவலின் படி, மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  5,3973-ஆக உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த நேரிடும்: சுகாதாரத்துறை மந்திரி எச்சரிக்கை
கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் உள்ளது.
2. மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,189 பேருக்கு கொரோனா பாதிப்பு
மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் 9 அல்-கொய்தா தீவிரவாதிகள் கைது
மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் 9 அல்-கொய்தா தீவிரவாதிகளை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
4. மேற்கு வங்கம், ராஜஸ்தான் மாநிலங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரம்
மேற்கு வங்காளத்தில் இன்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
5. மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,161 பேருக்கு கொரோனா பாதிப்பு
மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.