கொரோனாவில் இருந்து ஆறே நாட்களில் மீண்ட 100 வயது மூதாட்டி !


கொரோனாவில் இருந்து ஆறே நாட்களில் மீண்ட  100 வயது மூதாட்டி !
x
தினத்தந்தி 25 July 2020 7:31 PM IST (Updated: 25 July 2020 7:31 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 100 வயது மூதாட்டி, அந்நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம்,  பெல்லாரி மாவட்டத்தை சேர்ந்தவர் 100 வயது மூதாட்டி ஹல்லம்மா. இவருக்கு கடந்த 16ஆம் தேதி  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர் சிகிச்சைக்கு பின்னர் அந்த மூதாட்டி  கொரோனா நோயில் இருந்து  முழுமையாக குணமடைந்து அனைவருக்கும் நம்பிக்கை அளித்துள்ளார்.

 கொரோனாவில் இருந்து மீண்டது குறித்து மூதாட்டி ஹல்லமா கூறும் போது, “மருத்துவர்கள் எனக்கு நன்றாக சிகிச்சை அளித்தனர்.
வழக்கமான உணவோடு, நான் ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டேன். மருத்துவர்கள் எனக்கு மாத்திரைகள் மற்றும் ஊசி போட்டார்கள், நான் இப்போது ஆரோக்கியமாக இருக்கிறேன்.  கொரோனா ஒரு ஜலதோஷம் போன்றது” என்றார்.

கடந்த 22 ஆம் தேதி கொரோனா பாதிப்பில் இருந்து ஹலம்மா மீண்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

Next Story