கேரளாவில் இன்று 1,103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


கேரளாவில் இன்று 1,103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 25 July 2020 8:00 PM IST (Updated: 25 July 2020 8:00 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் இன்று 1,103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 1,103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,098 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 3 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்ததையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 9,420 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 8,613 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்றைக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 119 பேர், வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 106 பேர். இன்றைய பாதிப்பில் 72 பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22,013 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 6,53,982 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

Next Story