இந்தியாவில் கொரோனா பரிசோதனை 4.2 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்


இந்தியாவில்  கொரோனா பரிசோதனை 4.2 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது:  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
x
தினத்தந்தி 25 July 2020 9:29 PM IST (Updated: 25 July 2020 9:29 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கொரோனா பரிசோதனை 4.2 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,  

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 3-ம் இடம் வகிக்கிறது.  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48, 916 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு 13 லட்சத்தை தாண்டியது.

இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் அதிகபட்ச பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,20,898 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதனால், 10 லட்சம் பேருக்கு நடத்தப்படும் பரிசோதனையின் சராசரி 11,485 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மொத்த பரிசோதனை 1,58,49,068 ஆகவும் அதிகரித்துள்ளது. இந்தத் தகவலை   மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story