கொரோனா தொற்று பாதிக்கப்பட்டால் அச்சம் வேண்டாம்: மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்


கொரோனா தொற்று பாதிக்கப்பட்டால் அச்சம் வேண்டாம்:  மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்
x
தினத்தந்தி 26 July 2020 3:03 PM IST (Updated: 26 July 2020 3:03 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று ஏற்பட்டால் அச்சம் வேண்டாம் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

போபால்,

பாரதீய ஜனதா மூத்த தலைவரும், மத்தியபிரதேச மாநில முதல்-மந்திரியுமான சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் போபாலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  61-வயதான சிவராஜ் சிங் சவுகான், நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இன்று காலை சிவராஜ் சிங் சவுகான் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- “  நான் நலமுடன் இருக்கிறேன்  என் நண்பர்களே. சுயநலம் எதுவும் இன்றி தங்கள் உயிரை பணையம் வைத்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் கொரோனா வாரியர்ஸின் (கொரோனாவுக்கு எதிரான பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்கள்) சேவை மதிப்பு மிக்கது. கொரோனாவுக்கு எதிரான பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் சல்யூட் செய்கிறேன்.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டால் அஞ்ச வேண்டாம்.  அறிகுறிகள் தென்பட்டதும் மறைக்காமல் பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.  கொரோனா வைரசுக்கு எதிரான  மிகப்பெரிய ஆயுதம் எதுவெனில் முகக்கவசம், ஆறு அடி இடைவெளி  ஆகியவையே ஆகும். எனவே, இதை தவறாது பின்பற்றுங்கள்” என்றார். 

Next Story