உத்தர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,260 பேருக்கு கொரோனா தொற்று


உத்தர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில்  3,260 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 26 July 2020 5:00 PM IST (Updated: 26 July 2020 5:00 PM IST)
t-max-icont-min-icon

உத்தர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,260 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

லக்னோ,

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்திலும் கொரோனா தனது கோர முகத்தை படிப்படியாக காட்டி வருகிறது. உத்தர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,260 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுவரை அம்மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 65 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உள்ளது. கொரோனா பாதிப்பால் 1,426 பேர் அம்மாநிலத்தில் உயிரிழந்துள்ளனர்.   கொரோனா பாதிப்புடன் 23,921-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story