ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை பரிந்துரை


ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை பரிந்துரை
x
தினத்தந்தி 26 July 2020 5:54 PM IST (Updated: 26 July 2020 5:54 PM IST)
t-max-icont-min-icon

திரையரங்குகளை திறப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை பரிந்துரை அனுப்பி உள்ளது.

புதுடெல்லி,

கொரோனா பரவல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இருப்பினும் நாடு முழுவதும் திரையரங்குகளை திறக்க இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

இதன் காரணமாக திரையரங்க ஊழியர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் திரையரங்கு உரிமையாளர்கள் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதிக்கலாம் என்று, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் உள்துறை அமைச்சருக்கு பரிந்துரையை அனுப்பி உள்ளது. அந்த பரிந்துரையில் 25 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் இந்த பரிந்துரை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

Next Story