தேசிய செய்திகள்

மராட்டியத்தில் மேலும் 101 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + 101 new COVID19 cases and one death reported in Maharashtra Police Force. Total cases in the Force rises to 8,584 Maharashtra Police

மராட்டியத்தில் மேலும் 101 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

மராட்டியத்தில் மேலும் 101 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் மேலும் 101 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

ஆட்கொல்லி கொரோனா வைரஸ் மராட்டியத்தை புரட்டி போட்டு உள்ளது. இங்கு நோய் பாதிப்பு அசுர வேகத்தில் பரவி வருகிறது. மராட்டியத்தில் இதுவரை நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 75 ஆயிரத்து 799 ஆக உள்ளது.

மராட்டியத்தில் கொரோனா ஊரடங்கு பாதுகாப்பு பணியில் இருந்துவரும் காவலர்களும் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 101 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,584 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த ஆட்கொல்லி நோய்க்கு இன்று மேலும் ஒரு காவலர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 6,538 காவலர்கள் கொரோனா நோய்தொற்றிலிருந்து குண்மடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை ஆயிரத்திற்கு மேற்பட்ட காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் ஊரடங்கு அக்.31 ஆம் தேதி வரை நீட்டிப்பு
நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ள மராட்டியத்தில் ஊரடங்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2. மராட்டியத்தில் இன்று மேலும் 18,317 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் மேலும் 18,317 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
3. மராட்டியத்தில் இன்று மேலும் 327 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் மேலும் 327 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது
மராட்டியத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து உள்ளது.
5. மராட்டியத்தில் குறைந்த கொரோனா பதிப்பு: இன்று மேலும் 11,921 பேருக்கு தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 11,921 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...