கேரள தங்கம் கடத்தல் வழக்கு: சிவசங்கரனிடம் 2-வது நாளாக என்ஐஏ தீவிர விசாரணை


கேரள தங்கம் கடத்தல் வழக்கு:  சிவசங்கரனிடம் 2-வது நாளாக என்ஐஏ தீவிர  விசாரணை
x
தினத்தந்தி 28 July 2020 10:20 AM GMT (Updated: 28 July 2020 10:21 AM GMT)

திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரனிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை செய்து வருகின்றனர்.

கொச்சி,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தங்க கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரன் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியாகின. இதையடுத்து அவரிடம் ஏற்கனவே சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் தற்போது என்ஐஏ அதிகாரிகளின் விசாரணை வளையத்திற்குள் சிவசங்கரன் உள்ளார்.  நேற்று  9 மணி நேரம் சிவசங்கரனிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், 2-வது நாளாக  சிவசங்கரனிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.  சிவசங்கரனிடம் நடந்து வரும் விசாரணையில் கடத்தல் கும்பலுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஸ்வப்னா சுரேஷ் தன்னிடம் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாகவும் கடத்தல் கும்பல் என தெரிந்திருந்தால் அவர்களுடனான தொடர்பை துண்டித்திருப்பேன் என சிவசங்கரன் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று நடந்து வரும் விசாரணையை தொடர்ந்து சிவசங்கரன் கைதாவாரா? அல்லது தொடர் விசாரணையில் இருந்து விடுவிக்கப்படுவாரா? என தெரியவரும் 

Next Story