தேசிய செய்திகள்

சோனியா காந்தி தலைமையில் 30-ம் தேதி காங்கிரஸ் மாநிலங்களவை எம்.,பிக்கள் கூட்டம் + "||" + Sonia Gandhi calls meeting of Rajya Sabha MPs on July 30 over 'current political situation'

சோனியா காந்தி தலைமையில் 30-ம் தேதி காங்கிரஸ் மாநிலங்களவை எம்.,பிக்கள் கூட்டம்

சோனியா காந்தி தலைமையில் 30-ம் தேதி காங்கிரஸ் மாநிலங்களவை எம்.,பிக்கள் கூட்டம்
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா தலைமையில் நாளை மறுநாள் (30-ம் தேதி) மாநிலங்களவை எம்.பி-க்கள் கூட்டம் நடைபெறுகிறது.
புதுடெல்லி,

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் அரசை கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதை கண்டித்து, காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. குறிப்பாக ராஜஸ்தானில் கெலாட் அரசை கவிழ்ப்பதற்காக பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.


இந்நிலையில், நாளை மறுநாள் (30-ம் தேதி) சோனியா காந்தி தலைமையில், காணொலி காட்சி மூலமாக காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை எம்பி-க்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில், அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் மட்டும் கலந்துகொள்கின்றனர். இதில், தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் கொரோனா தாக்கம், பொருளாதார வீழ்ச்சி, இந்திய எல்லையில் சீன ஆக்கிரமிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளன. ஏற்கனவே, கடந்த 11-ம் தேதி காங்கிரஸ் மக்களவை எம்பி-க்கள் கூட்டம் நடைபெற்றது.

அதில், கலந்து கொண்ட மக்களவை எம்பி-க்கள் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை, கட்சியின் தலைமையை ஏற்குமாறு வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் எனத்தகவல்
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
2. சோனியா காந்தி பதவி விலகியதாக வெளியான தகவல் தவறானது: காங்கிரஸ்
சோனியா காந்தி பதவி விலகியதாக வெளியான தகவல் தவறானது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
3. சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராகத்தொடர வேண்டும் - கே.எஸ்.அழகிரி
சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராகத்தொடர வேண்டும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
4. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பொறுப்பில் இருந்து விலக சோனியா காந்தி முடிவு ?
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பொறுப்பில் இருந்து சோனியா காந்தி விலக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
5. சோனியா காந்தி உடல்நிலையில் முன்னேற்றம் - டெல்லி கங்காராம் மருத்துவமனை தலைவர் தகவல்
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் உடல் நலம் முன்னேற்றுத்துடன், திருப்தியளிக்கும் வகையில் உள்ளதாக டெல்லி கங்கா ராம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.