தேசிய செய்திகள்

மராட்டியத்தில் 10-வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியாகிறது + "||" + Maharashtra SSC 10th Result 2020: MSBSHE Class 10 results on July 29

மராட்டியத்தில் 10-வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியாகிறது

மராட்டியத்தில் 10-வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியாகிறது
மராட்டியத்தில் 10-வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியாகிறது.
மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பரவலுக்கு மத்தியிலும் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. இந்த தேர்வை சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். 

அதையடுத்து கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் 10-ம் வகுப்பு மாணவர்கள் தங்களது தேர்வு முடிவு எப்போது வெளியிடப்படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர்.

இந்தநிலையில், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று மாநில உயர் மற்றும் மேல்நிலை கல்வி வாரியம் அறிவித்து உள்ளது. மதியம் 1 மணிக்கு வெளியாகும் தேர்வு முடிவை மாணவர்கள் கல்வி வாரிய இணையதள பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Maharashtraeducation.com, examresults.net/maharashtra, mahresult.nic.in என்ற வலைத்தளங்களிலும் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் ஊரடங்கு அக்.31 ஆம் தேதி வரை நீட்டிப்பு
நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ள மராட்டியத்தில் ஊரடங்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2. மராட்டியத்தில் இன்று மேலும் 18,317 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் மேலும் 18,317 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
3. மராட்டியத்தில் இன்று மேலும் 327 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் மேலும் 327 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது
மராட்டியத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து உள்ளது.
5. மராட்டியத்தில் குறைந்த கொரோனா பதிப்பு: இன்று மேலும் 11,921 பேருக்கு தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 11,921 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...