தேசிய செய்திகள்

பால் கொடுக்கும் ஆட்டுக்கிடாய் ராஜஸ்தானில் நிகழ்ந்த அதிசயம் + "||" + ராஜஸ்தானில் ஆட்டுக்கிடாய் ஒன்று பால் கொடுத்து அதிசயத்தை ஏற்படுத்தி உள்ளது.

பால் கொடுக்கும் ஆட்டுக்கிடாய் ராஜஸ்தானில் நிகழ்ந்த அதிசயம்

பால் கொடுக்கும் ஆட்டுக்கிடாய் ராஜஸ்தானில் நிகழ்ந்த அதிசயம்
ராஜஸ்தானில் ஆட்டுக்கிடாய் ஒன்று பால் கொடுத்து அதிசயத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநில தோல்பூரில் ஆட்டுக்கிடாய் ஒன்று ஊரின் பேசுபொருளாகியுள்ளது. காரணம் அதனிடத்தில் பால் சுரந்ததே. குர்ஜா கிராமத்தைச் சேர்ந்த ராஜீவ் குஷ்வாஹா, ஆட்டுக்கிடாய் ஒன்றை இரண்டரை மாத வயதே ஆன நிலையில் வாங்கியுள்ளார்.  

6 மாதங்கள் ஆன பிறகு இந்த ஆட்டுக்கிடாய்க்கு பால்மடி உருவாவதைக் கவனித்தோம், பால் கறந்து பார்த்தோம். பால் வந்தது. நாளொன்றுக்கு 200 முதல் 250 மி.லி. வரை பால் கறக்கிறது

இந்த அதிசயம் எப்படிச் சாத்தியம் என்று விலங்குகள் நல மருத்துவர் கியான் பிரகாஷ் சக்சேனாவிடம் கேட்ட போது, 'எப்போதும் தாயின் உடலில் ஆண், பெண் பாலின ஹார்மோன்கள் சம அளவில் இருக்கும். இதுதான் ஆண், பெண் உறுப்புகளைத் தீர்மானிக்கிறது. இந்த ஆட்டுக்கிடாயில் ஹார்மோன் சமநிலை குலைவினால் இப்படி ஆகியிருக்கும். ஆனால், இது அரிதினும் அரிது. லட்சத்தில் ஒன்று இப்படி பிறக்கும்'' என்றார்.

ஆட்டுக்கிடாயிடம் எப்படி பால் சுரக்க முடியும் என்று விலங்குகள் மருத்துவ நிபுணரிடம் கேட்டபோது, ''கருவில் இருக்கும்போதே ஹார்மோன் சமச்சீர்குலைவு ஏற்பட்டு இப்படி ஏற்பட வாய்ப்பு உண்டு'' என்றார்.