தேசிய செய்திகள்

பீகாரில் மேலும் 16 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு + "||" + Lockdown extended in Bihar for a period of 16 days effective from 1st August in wake of #COVID19

பீகாரில் மேலும் 16 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு

பீகாரில் மேலும் 16 நாட்களுக்கு  ஊரடங்கு நீட்டிப்பு
பீகாரில் மேலும் 16 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
பாட்னா,

கொரோனா தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் பீகாரில் மேலும்  16 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அமல்படுத்தியுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31 ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில்,  ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 16 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதாக பீகார் அரசு அறிவித்துள்ளது.

கடந்த 3 வாரங்களாக மாநிலத்தில் நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ள பீகார் மாநில அரசு, ஊரடங்கு சமயத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 

மேலும்,  அரசு,  அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவித பணியாளர்களுடன் இயங்கலாம் என்றும்  மத வழிபாட்டு தலங்கள் திறக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் எனவும் பீகார் அரசு அறிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பா.ஜனதாவால் பீகாரில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நிதிஷ்குமார் -கருத்துக் கணிப்பு
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான அணி மீண்டும் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
2. அசாம், ஜார்க்கண்ட் மாநில கொரோனா பாதிப்பு விவரம்
அசாம் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 666- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கொரோனா அச்சுறுத்தல்: அயர்லாந்தில் மீண்டும் லாக்டவுன் அறிவிப்பு
அயர்லாந்தில் புதிதாக 1031 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
4. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால் பிப்ரவரிக்குள் கொரோனாவை கட்டுப்படுத்தி விடலாம்: நிபுணர் குழு அறிக்கை
வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றினால் பிப்ரவரிக்குள் கொரோனாவை கட்டுப்படுத்தி விடலாம் என்றும், புதிதாக ஊரடங்கு அமல்படுத்த தேவை இல்லை என்றும் மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. இந்தியாவில் இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர் எண்ணிக்கை 88 சதவீதமாக உயர்வு
இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர் எண்ணிக்கை 88 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில் நாடு முழுவதும் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது.