தேசிய செய்திகள்

புதிய கல்விக்கொள்கை - மாற்றங்கள் என்ன? உயர்கல்வித்துறை செயலர் விளக்கம் + "||" + Cabinet approved National Education Policy 2020; Major reforms in higher education include a target of 50% gross enrollmen

புதிய கல்விக்கொள்கை - மாற்றங்கள் என்ன? உயர்கல்வித்துறை செயலர் விளக்கம்

புதிய கல்விக்கொள்கை - மாற்றங்கள் என்ன? உயர்கல்வித்துறை செயலர் விளக்கம்
புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
புதுடெல்லி

புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, கல்விக்கொள்கை குறித்து மத்திய உயர்கல்வித்துறை செயலர் அமித் கரே செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

*கல்வித்துறையில் முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

* 34 ஆண்டுகளாக கல்விக்கொள்கையில் மாற்றம்  எந்த மாற்றம் செய்யப்படாமல் இருந்தது.

* மத்திய மனித வள அமைச்சகம் கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 
* 2030-க்குள் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை அடையவே புதிய கல்விக்கொள்கை

* உயர்கல்வி அமைப்புகளை ஒழுங்குபடுத்த ஒரே வாரியம் அமைக்கப்படும்.

* முதல் ஆண்டில்  பழைய மற்றும் புதிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்தப்படும்.

* 2 ஆம் ஆண்டில் புதிய கல்விக்கொள்கை முழுமையாக அமலில் இருக்கும்.

* பொறியியல் போன்ற உயர்கல்வி படிப்புகளில் மாணவர்கள், ஓரிரு வருடங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு மீண்டும் படிப்பை   தொடரலாம்.

*15 ஆண்டுகளில் இணைப்புக்கல்லூரி என்ற முறை நிறுத்தப்படும்.

*எம்.பில் படிப்புகள் நிறுத்தபடுவதாக புதிய கல்விக்கொள்கையில் அறிவிப்பு

*நாடு முழுவதும் ஒரே கல்வித்தரம் கொண்டு வரப்படும்.

* கல்வி அறிவு குறைவாக உள்ள பகுதிகளில் சிறப்பு கல்வி மண்டலங்கள் உருவாக்கப்படும்.

*  தேசிய ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்படும்.

* இணைய வழி பாடங்கள் மாநில மொழிகளில் வெளியிடப்படும்.

* மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் மென்பொருள் வெளியிடப்படும். 

* பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்படும்.

*கல்வி கட்டணங்கள் தன்னிச்சையாக அதிகரிக்கப்படாது.

தொடர்புடைய செய்திகள்

1. குணம் அடைந்தவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படுமா? ; ஐசிஎம்ஆர் ஆய்வு செய்வதாக மத்திய அரசு தகவல்
இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை கிட்டதட்ட 60 லட்சத்தை நெருங்கியுள்ளது.
2. நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பிக்கள், பிரதமர் மோடியுடன் சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியை திமுக எம்.பிக்கள் திடீரென சந்தித்துப்பேசினர்.
3. வேளாண் மசோதாவுக்கு மாநிலங்களவையில் திமுக கடும் எதிர்ப்பு
வேளாண்மை மாநில அரசின் பட்டியலில் இருப்பதால் மத்திய அரசுக்கு சட்டம் கொண்டுவர அதிகாரமே இல்லை என திமுக தெரிவித்துள்ளது.
4. இந்தியாவில் நடப்பு ஆண்டு சாலை விபத்துக்கள் 35 சதவிகிதம் குறைவு
இந்தியாவில் நடப்பு ஆண்டு சாலை விபத்துக்கள் 35 சதவிகிதம் குறைந்து இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
5. கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு அவமதிக்கிறது- ராகுல் காந்தி பாய்ச்சல்
கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு அவமதிக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.