ஊரடங்கின் 3 ஆம் கட்ட தளர்வுகள்: இந்தியா முழுவதும் இரவு நேர ஊரடங்கு ரத்து


ஊரடங்கின் 3 ஆம் கட்ட தளர்வுகள்:  இந்தியா முழுவதும் இரவு நேர ஊரடங்கு ரத்து
x
தினத்தந்தி 29 July 2020 1:54 PM GMT (Updated: 29 July 2020 2:18 PM GMT)

இந்தியா முழுவதும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது,

புதுடெல்லி,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு ஜூன் மாதம் முதல் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில்,  ஊரடங்கின் 3 ஆம் கட்ட தளர்வுகள்  இன்று வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:

*இரவு நேர ஊரடங்கு ரத்து
*5-ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் செயல்படலாம்.
*கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு
*சமூக இடைவெளியுடன் சுதந்திர தின விழா கொண்டாடப்படும்
*யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் ஆகஸ்ட் 5 முதல் அனுமதி

*திரையரங்குகள், மெட்ரோ ரயில் சேவை, நீச்சல் குளம், பார்களுக்கு அனுமதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
*பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் 31 வரை இயங்காது

*திருவிழாக்கள், அரசியல் கூட்டங்கள், விளையாட்டு நிகழ்வுகள் ஆகியவைகளுக்கும் தடை நீட்டிப்பு
*பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபானக் கூடங்கள், அரங்குகள் செயல்பட விதித்த தடை தொடர்கிறது

*உள்நாட்டில் குறைந்த அளவில் உள்நாட்டு விமானங்கள் இயங்க அனுமதி
*பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்து மாநில அரசுகள் முடிவு எடுத்துக்கொள்ளலாம்.
*வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தாயகம் திரும்புபவர்களுக்காக மட்டும் வெளிநாட்டு விமானங்கள் இயக்க அனுமதி

Next Story