கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் கணிசமாக குறைந்து வருகிறது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்


கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் கணிசமாக குறைந்து வருகிறது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
x
தினத்தந்தி 29 July 2020 3:31 PM GMT (Updated: 29 July 2020 3:31 PM GMT)

கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் கணிசமாக குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல், கொரோனா பாதிப்பால் ஏற்படும்  உயிரிழப்பு விகிதம் கணிசமாக குறைந்து வருகிறது எனவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.  

இந்தியாவின் கொரோனா உயிரிழப்பு விகிதம் உலகளவில் உள்ளதை விட குறைவாக உள்ளதாகவும் புதன் கிழமை நிலரப்படி 2.23 சதவிகிதமாக உயிரிழப்பு விகிதம் உள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு பதிவாகும் குறைந்தபட்ச விகிதம் இதுதான் எனவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. கொரோனா பாதிப்பில் இருந்து மீள்பவர்களின் சதவிகிதம் 64.51 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story