சுஷாந்த் சிங் மரண வழக்கு விசாரணையை மும்பைக்கு மாற்ற வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் ரியா சக்ரபோர்த்தி மனு


சுஷாந்த் சிங் மரண வழக்கு விசாரணையை மும்பைக்கு மாற்ற வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில்   ரியா சக்ரபோர்த்தி மனு
x
தினத்தந்தி 29 July 2020 4:38 PM GMT (Updated: 29 July 2020 4:50 PM GMT)

சுஷாந்த் சிங் மரண வழக்கு விசாரணையை மும்பைக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ரியா சக்ரபோர்த்தி மனு தாக்கல் செய்துள்ளார்.

மும்பை,

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த மாதம் 14ஆம் தேதி மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை இந்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் மும்பை போலீசார், அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், நடிகர்கள் உள்பட 38 பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், சுஷாந்தின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மீது சுஷாந்த் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், சுஷாந்திடம்  நிதி முறைகேட்டில் ஈடுபட்டு, அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டியதாக பாட்னாவில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட 5 பேர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுஷாந்த் மரண வழக்கு தொடர்பாக ஆவணங்களை பெறுவதற்காக, பீகார் போலீசார் மும்பை விரைந்துள்ளனர்.  ரியா மீது, சுஷாந்த்தின் தந்தை அளித்துள்ள புகார் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதனிடையே,  தன் மீதான வழக்கை மும்பைக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் நடிகை ரியா சக்ரபோர்த்தி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Next Story