தேசிய செய்திகள்

அந்தமானில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு + "||" + Full curfew on weekends in the Andamans

அந்தமானில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு

அந்தமானில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு
அந்தமானில் வருகிற 1-ந் தேதி முதல் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமலாகிறது.
போர்ட்பிளேர், 

இந்தியாவின் யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபார் தீவும் கொரோனாவின் பிடியில் இருந்து தப்பவில்லை. அங்கு கடந்த மாதம் 10-ந் தேதி வரை 33 பேர் மட்டுமே இந்த வைரசின் பிடியில் சிக்கி இருந்தனர். இதையடுத்து அங்கு தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கை மெதுவாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் அங்கு ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அந்த வகையில் தற்போது அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 363 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு ஒருவரின் உயிரையும் கொரோனா பறித்துள்ளது.

இந்த நிலையில் அந்தமானில் வருகிற 1-ந் தேதி முதல் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தின் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவித தளர்வுகளும் இன்றி இந்த பொது ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் எனவும், அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்படுவதுடன், போக்குவரத்தும் அனுமதிக்கப்படாது என்று அந்தமான் முதன்மை செயலாளர் சேத்தன் சங்காய் தெரிவித்துள்ளார்.