தேசிய செய்திகள்

மத்தியபிரதேசத்தில் மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா + "||" + Corona to one more minister in Madhya Pradesh

மத்தியபிரதேசத்தில் மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா

மத்தியபிரதேசத்தில் மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா
மத்தியபிரதேசத்தில் மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
போபால், 

மத்தியபிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானுக்கு கடந்த 25-ந்தேதி கொரோனா தொற்று உறுதியானதையடுத்து போபாலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதற்கு முன்பாக மாநில கூட்டுறவுத்துறை மந்திரி அரவிந்த் சிங் படோரியா கொரோனா பாதிப்புக்கு ஆளானார்.

இந்தநிலையில் மத்தியபிரதேசத்தில் மாநில நீர்வளத்துறை மந்திரி துல்சி சிலாவாத்துக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. அவரது மனைவிக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் மந்திரி பதிவிட்டுள்ளார். தனக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் என்னுடன் தொடர்புடையவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு மந்திரி தனது டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மூத்த பா.ஜ.க. தலைவர் ஜோதிர்ஆதித்ய சிந்தியா, மந்திரியும், அவரது மனைவியும் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா: பா.ஜனதாவில் இணைந்தார்
மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா செய்தநிலையில், தன்னை பா.ஜனதாவில் இணைத்துக் கொண்டார்.
2. மத்தியபிரதேசத்தில் வீடு வீடாக கொரோனா பரிசாதனை - முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான்
மத்தியபிரதேசத்தில் வீடு வீடாக கொரோனா பரிசாதனை செய்யப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
3. மத்தியபிரதேசத்தில் ராஜினாமா செய்த 22 காங். எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர்ந்தனர்
மத்தியபிரதேசத்தில் ராஜினாமா செய்த 22 காங். எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைந்தனர்.
4. மத்தியபிரதேசத்தில் 17 காங். எம்.எல்.ஏ.க்களுடன் ஜோதிர்ஆதித்ய சிந்தியா மாயம்: கமல்நாத் அரசுக்கு மீண்டும் நெருக்கடி?
மத்தியபிரதேசத்தில் ஜோதிர்ஆதித்ய சிந்தியா மற்றும் அவருக்கு ஆதரவான 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை காணவில்லை. அதனால் கமல்நாத் அரசுக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
5. மத்தியபிரதேசத்தில் கமல்நாத் அரசை கவிழ்க்க 8 எம்.எல்.ஏ.க்கள் கடத்தலா? - காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பா.ஜனதா மறுப்பு
மத்தியபிரதேசத்தில் கமல்நாத் அரசை கவிழ்க்க 8 எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவினர் கடத்திச் சென்று விட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அதை பா.ஜனதா மறுத்துள்ளது.