தேசிய செய்திகள்

இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பலி விகிதம் குறைந்தது + "||" + Corona death rate is lower than ever before

இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பலி விகிதம் குறைந்தது

இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பலி விகிதம் குறைந்தது
கொரோனாவுக்கு பலியானோர் விகிதம், இதுவரை இல்லாத அளவுக்கு 2.23 சதவீதமாக குறைந்தது.
புதுடெல்லி, 

கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவில் இருந்து குணமடைந்து 35 ஆயிரத்து 286 பேர் ‘டிஸ்சார்ஜ்’ ஆகியுள்ளனர். தொடர்ந்து 6-வது நாளாக, நாள் ஒன்றுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வருகிறார்கள்.

இத்துடன், இதுவரை கொரோனாவுக்கு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 88 ஆயிரத்து 29 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, இந்த எண்ணிக்கை வேகமாக 10 லட்சத்தை நெருங்கி வருகிறது.

இதன்மூலம், குணமடைந்தவர்கள் விகிதம் 64.51 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, மற்றொரு சாதனை ஆகும். தற்போது, 5 லட்சத்து 9 ஆயிரத்து 447 பேர் மட்டுமே மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

கொரோனாவுக்கு பலியானோர் விகிதம், 2.23 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து இதுதான் மிகக்குறைவான அளவாகும்.

இதற்கு மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த வியூகமே காரணம் என்றும், தொடர்ந்து பலி விகிதம் குறைந்து வருவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.