தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு மணிப்பூரில் முதல் பலி + "||" + First death to Corona in Manipur

கொரோனாவுக்கு மணிப்பூரில் முதல் பலி

கொரோனாவுக்கு மணிப்பூரில் முதல் பலி
கொரோனாவுக்கு மணிப்பூரில் ஒருவர் முதல் பலியானார்.
இம்பால், 

இந்தியாவில் லட்சத்தீவை தவிர, பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா பலரையும் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த வைரசின் பிடியில் சிக்கி மிசோரம் மற்றும் மணிப்பூரை தவிர பிற அனைத்து மாநிலங்களிலும் கொரோனா உயிர்ப்பலி வாங்கி இருந்தது. இந்த நிலையில் மணிப்பூரிலும் நேற்று ஒருவரின் உயிரை கொரோனா பறித்துள்ளது.

அங்குள்ள தாபோல் மாவட்டம் கோஞ்சியோம் பகுதியை சேர்ந்த 56 வயதான நபருக்கு கடந்த 26-ந் தேதி கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, ரிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுவே மணிப்பூரின் கொரோனாவால் ஏற்பட்ட முதல் பலி ஆகும். அவருக்கு சிறுநீரக கோளாறும், ரத்த அழுத்த பிரச்சினையும் இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மணிப்பூரில் எந்தவித பயண தொடர்பும் இன்றி பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், கடந்த 23-ந் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 2,317 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1,615 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், மீதமுள்ளவர்கள் ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 495 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு 19 ஆயிரத்தை எட்டுகிறது
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 495 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாயினர். இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்தை எட்டுகிறது.
2. திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 495 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு 19 ஆயிரத்தை எட்டுகிறது
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 495 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாயினர். இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்தை எட்டுகிறது.
3. கொரோனா வைரஸ் பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கியது புதிதாக 328 பேருக்கு தொற்று; 4 பேர் உயிரிழப்பு
புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கியது. புதிதாக நேற்று 328 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
4. மாதம் 60 ரூபாய் செலுத்தியவருக்கு ரூ.21 ஆயிரத்துக்கு ‘பில்’ கணக்கீட்டு குளறுபடியால் எகிறிய மின்கட்டணம்
மின் கணக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடியால் மாதம் 60 ரூபாய்க்குள் மின்கட்டணம் செலுத்தியவருக்கு 21 ஆயிரம் ரூபாய் மின்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதை கண்டித்து அரியாங்குப்பம் மின் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
5. கர்நாடகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் எண்ணிக்கை 38 ஆக உயர்வு
கர்நாடகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.