தேசிய செய்திகள்

கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகளை திறக்க மக்களிடம் வரவேற்பு இல்லை: கருத்துக்கணிப்பு முடிவில் அம்பலம் + "||" + People are not welcome to open theaters due to the Corona threat: exposure at the end of the poll

கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகளை திறக்க மக்களிடம் வரவேற்பு இல்லை: கருத்துக்கணிப்பு முடிவில் அம்பலம்

கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகளை திறக்க மக்களிடம் வரவேற்பு இல்லை: கருத்துக்கணிப்பு முடிவில் அம்பலம்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகளை திறக்க பெரும்பான்மையான மக்களிடம் வரவேற்பு இல்லை என்பது ஒரு கருத்துக்கணிப்பில் அம்பலமாகி உள்ளது.
கொல்கத்தா, 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிற நிலையில், தொடர் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக வணிக வளாகங்கள், பன்னடுக்கு திரையரங்குகள், பன்னாட்டு விமான சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

ஆகஸ்டு 1-ந் தேதி ‘அன்லாக்-3’ என்ற பெயரில் அரசு என்னென்ன ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தப்போகிறது என்ற அறிவிப்புக்காக அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.

இந்த நிலையில் கட்டுப்பாடுகள் தளர்வு தொடர்பாக ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ என்ற சமூக ஊடக தளம், நாடு முழுவதும் 255 மாவட்டங்களில், 34 ஆயிரம் பேரிடம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வருமாறு:-

* கொரோனா வைரஸ் அச்சுறுத்தல், ஆபத்து உள்ளதால் அடுத்த 60 நாட்களில் பன்னடுக்கு திரையரங்குகளுக்கு செல்ல விருப்பம் இல்லை என்று கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 72 சதவீதம் பேர் கூறி உள்ளனர். 6 சதவீதம் பேர் மட்டுமே இவற்றை திறக்க ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

* ஆகஸ்டு 1-ந் தேதி முதல் உள்ளூர் ரெயில்சேவை, மெட்ரோ ரெயில் சேவைகளை தொடங்க 63 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 29 சதவீதத்தினர் மட்டுமே ஆதரவு அளிக்கின்றனர்.

* பன்னாட்டு விமான சேவையை ஆகஸ்டு மாதம் தொடங்குவதற்கு 62 சதவீதத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 31 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவான கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த கருத்து கணிப்பு முடிவுகள், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. "கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்றது" - இலங்கை அரசு தகவல்
இலங்கையில் மூன்றாவது கட்ட கொரோனா பரவல் தொடங்கி உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
2. கொரோனா அச்சுறுத்தல்: ராஜஸ்தானில் 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்
கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் ராஜஸ்தானில் 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
3. பாகிஸ்தானில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐந்து மாதங்களுக்குப் பிறகு பாகிஸ்தானில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
4. தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரை 4 நாட்கள் நடத்த திட்டம்
தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரை 4 நாட்கள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
5. கொரோனா அச்சுறுத்தல்: ரசிகர்களுக்கு ஜெயம்ரவி வேண்டுகோள்
கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு நடிகர் ஜெயம்ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-