இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரொனா பாதிப்பு முதன்முறையாக 50 ஆயிரத்தை கடந்தது


இந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில் கொரொனா பாதிப்பு முதன்முறையாக 50 ஆயிரத்தை கடந்தது
x
தினத்தந்தி 30 July 2020 4:22 AM GMT (Updated: 30 July 2020 4:22 AM GMT)

இந்தியாவில் முதன்முறையாக கடந்த 24 மணி நேரத்தில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.

புதுடெல்லி

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில் இந்தியாவில் முதன்முறையாக கடந்த 24 மணி நேரத்தில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. 750-க்கும் மேற்பட்டோர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்ததன் காரணமாக, கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிகை 35 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.இந்தியாவில் கொரோனா பாதிப்பிற்கு இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,968

அதேசமயம், பாதிக்கப்பட்ட சுமார் 15,83,792  பேரில், 10 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். சிகிச்சை பெறுவோர் - 5,28,242 குணமடைந்தோர் - 10,20,582

அதிகபட்சமாக ஆந்திர மாநிலத்தில், 10 ஆயிரத்து 93 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. அதைதொடர்ந்து, மராட்டியத்தில்  9, 211 பேரும், மேற்குவங்காளத்தில் 2,294 பேரும் மற்றும் குஜராத்தில் 1,144 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜூலை 29 வரை சோதனை மாதிரிகளின் எண்ணிக்கை 1,81,90,382 ஆகும், இதில் நேற்று சோதனை செய்யப்பட்ட 4,46,642 மாதிரிகள் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்து உள்ளது.

Next Story