தேசிய செய்திகள்

இந்தியா-மியான்மர் எல்லையில் அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை + "||" + Manipur: 3 soldiers of Assam Rifles killed, 6 injured in violent ambush near Indo-Myanmar border

இந்தியா-மியான்மர் எல்லையில் அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை

இந்தியா-மியான்மர் எல்லையில் அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை
இந்தியா-மியான்மர் எல்லைக்கு அருகே பதுங்கியிருந்து பதுங்கி இருந்த அசாம் ரைபிள்ஸ் 3 வீரர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர், 6 பேர் காயமடைந்தனர்.
இம்பால்:

மணிப்பூர் மாநிலம் சந்தல் மாவட்டத்தில் மியான்மர் எல்லையை ஒட்டிய  சாஜிக் தம்பிக் பகுதியில் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் ரோந்து சென்றனர். அப்போது பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் வீரர்களின் வாகனம் சிக்கியது. 

இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த வீரர்கள் சுதாரிப்பதற்குள், அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில், 3 வீரர்கள் உயிரிழந்தனர். 6 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள லீமகாங்கில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதிக்கு பாதுகாப்பு படையினர் விரைந்துள்ளனர். உள்ளூர் பயங்கரவாத குழுவான மக்கள் விடுதலை முன்னணி இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக தெரியவந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மாணவர்கள் கவனத்திற்கு...
12 ஆம் வகுப்பு தேர்வில் மாணவியர் 94.30 சதவீதமும், மாணவர்கள் 89.41 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர்.
2. இங்கிலாந்து பிரீமியர் லீக் வீரர்கள் மேலும் 4 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு;
இங்கிலாந்து பிரீமியர் லீக் வீரர்கள் மேலும் 4 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 12 ஆக உயர்ந்து உள்ளது.
3. கொரோனா வைரஸால் யார் இறப்பார்கள் என்பதை இதயம் மூலம் கணிக்க முடியும்!!!
கொரோனா வைரஸால் யார் இறப்பார்கள் என்பதை இதயம் மூலம் கணிக்க முடியும். வலது இதய அறைகள் விரிவடைந்து இருந்தால் கொரோனா நோயாளிகள் தொற்றுநோயால் கொல்லப்படுவதற்கு கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று ஆய்வு கூறுகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...