தேசிய செய்திகள்

கங்கை நதியில் தவறி விழுந்த நபர்: வேடிக்கை பார்த்தவரை எட்டி உதைத்து தள்ளிவிட்ட போலீஸ் + "||" + Police kicking Eddie until he saw the fun

கங்கை நதியில் தவறி விழுந்த நபர்: வேடிக்கை பார்த்தவரை எட்டி உதைத்து தள்ளிவிட்ட போலீஸ்

கங்கை நதியில் தவறி விழுந்த நபர்: வேடிக்கை பார்த்தவரை எட்டி உதைத்து தள்ளிவிட்ட போலீஸ்
கங்கை நதியில் தவறி விழுந்த நபரை தேடும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது வேடிக்கை பார்த்தவரை போலீஸ் எட்டி உதைத்து தள்ளிவிட்ட சம்பவம் நடந்துள்ளது.
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில் உள்ள கங்கை நதியில் ஒருவர் விழுந்ததை தொடர்ந்து அவரை தேடும் பணி நடைபெற்று வந்தது. அதனை பார்க்க ஏராளமானோர் ஆற்றங்கரையில் திரண்டு இருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை காவல்துறை அதிகாரி தன் காலால் எட்டி உதைத்தார். இதில் அந்த இளைஞர் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்து படுகாயமடைந்தார். இந்த காட்சிகள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் அந்த காவல்துறை அதிகாரி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுஉள்ளது