டெல்லியில் டீசல் மீதான வாட் வரி குறைப்பு - அரவிந்த் கெஜ்ரிவால்


டெல்லியில் டீசல் மீதான வாட் வரி குறைப்பு -  அரவிந்த் கெஜ்ரிவால்
x
தினத்தந்தி 30 July 2020 9:54 AM GMT (Updated: 30 July 2020 9:54 AM GMT)

டெல்லியில் டீசல் மீதான வாட் வரியை 30%ல் இருந்து 16.75% ஆக குறைத்து அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

புதுடெல்லி,

பெட்ரோல் டீசல் போன்ற எரி பொருள் மீது மாநில அரசு வாட் வரி விதிக்கிறது. அந்த வாட் வரி விதிப்பு டெல்லியில் 30 சதவீதம் என்ற அளவுக்கு இருந்தது. இந்நிலையில்  டெல்லியில் டீசல் மீதான வாட் வரியை 30%ல் இருந்து 16.75% ஆக குறைத்து அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் வாட் வரி கிட்டத்தட்ட பாதியாக குறைக்கப்பட்டு விட்டதால், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 8 ரூபாய் 36 காசுகள் என்ற அளவுக்கு குறைந்து விடும். 82 ரூபாய் என்ற அளவுக்கு ஒரு லிட்டர் டீசல் டெல்லியில் விற்பனையாகியது. அது இனிமேல், 73 ரூபாய் 64 காசுகளாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போன்று பிற மாநிலங்களும் வாட் வரி விதிப்பை குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பிறமாநில மக்களிடையே எழுந்துள்ளது.


Next Story