தேசிய செய்திகள்

ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 10,167 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + In Andhra Pradesh, 10,167 people were diagnosed with coronavirus today

ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 10,167 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 10,167 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஆந்திர மாநிலத்தில் இன்று 10,167 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐதராபாத்,

ஆந்திர மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஆந்திராவில் ஒரே நாளில் 10,167 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,30,557 ஆக அதிகரித்துள்ளது.


அந்திராவில் தற்போது 69,252 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் 68 கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1,281 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் இதுவரை 60,024 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆந்திராவில் இதுவரை 18,90,077 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படுவோரின் விகிதம் 6.91 சதவீதமாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதி
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2. ஊழியருக்கு கொரோனா தொற்று குன்றத்தூர் பத்திரப்பதிவு அலுவலகம் மூடல்
ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பத்திரப்பதிவு செய்யப்பட்டதால்குன்றத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்தை அதிகாரிகள் இழுத்து மூடினர்.
3. அனகாபுத்தூர் நகராட்சி கமிஷனருக்கு கொரோனா
அனகாபுத்தூர் நகராட்சி கமிஷனருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
4. பிலிப்பைன்ஸில் மேலும் 6,352 பேர் கொரோனாவால் பாதிப்பு
பிலிப்பைன்ஸில் இன்று மேலும் 6,352 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
5. ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,61,423 ஆக உயர்வு
ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 8,61,423 ஆக உயர்ந்துள்ளது.