ராஜஸ்தான்: ஒரு எம்.எல்.ஏவுக்கு ரூ.15 கோடி அதிகரித்துள்ள "குதிரை வர்த்தக பேரங்கள்" -முதல்வர் கெலாட்


ராஜஸ்தான்: ஒரு எம்.எல்.ஏவுக்கு ரூ.15 கோடி அதிகரித்துள்ள  குதிரை வர்த்தக பேரங்கள் -முதல்வர் கெலாட்
x
தினத்தந்தி 31 July 2020 1:17 AM GMT (Updated: 31 July 2020 1:29 AM GMT)

ராஜஸ்தான் அரசியல் நெருக்கடியில் ஒரு எம்.எல்.ஏவின் விலை ரூ15. கோடி "குதிரை வர்த்தக பேரங்கள்" அதிகரித்துள்ளது என முதல்வர் கெலாட் தெரிவித்து உள்ளார்.

ஜெய்ப்பூர்: 

ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி, மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. மேலும், கட்சிக் கொறடா உத்தரவை மீறிய சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு எதிரான வழக்கில், 19 எம்எல்ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க ராஜஸ்தான் ஐகோர்ட்  தடை விதித்தது.

இதற்கு மத்தியில், சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க அசோக் கெலாட் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால், சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும் என்று கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை அடிக்கடி சந்தித்து வலியுறுத்தி வருகிறார். 

அசோக் கெலாட் மூன்று முறை கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை ஆளுநர்  மாளிகை சென்று சந்தித்து பேசினார். அப்போது சட்டசபையை கூட்டுவது தொடர்பாக வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ராஜஸ்தான் சட்டமன்றம் கூட்டப்படும் என்று கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவின் அலுவலகத்தில் இருந்து ஒரு அறிவிப்பு வெளிவந்து உள்ளது. ராஜஸ்தான் சட்டமன்றத்தின் ஐந்தாவது அமர்வை ஆகஸ்ட் 14 முதல் கூட்டும் அமைச்சரவை அனுப்பிய திட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 14 ஆம் தேதி தொடங்கவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரின் அறிவிப்புக்குப் பிறகு ராஜஸ்தானில் "குதிரை வர்த்தக பேரங்கள்" அதிகரித்துள்ளன என்று முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து முதல்வர் அசோக்கெலாட் கூறியதாவது:-

சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் தேதிஅறிவிக்கப்பட்ட பின்னர், குதிரை வர்த்தக பேரங்கள் அதிகரித்துள்ளன. முன்னதாக, எம்.எல்.ஏக்களின் விலை முதலில் ரூ .10 கோடியாகவும், இரண்டாவது ரூ .15 கோடியாகவும் உயர்ந்து உள்ளது. இப்போது அது வரம்பற்றதாகிவிட்டது, யார் குதிரை வர்த்தகம் செய்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என கூறினார்.


Next Story