மோடி அரசின் பொருளாதார மேலாண்மை முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது - ப.சிதம்பரம் கருத்து


மோடி அரசின் பொருளாதார மேலாண்மை முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது - ப.சிதம்பரம் கருத்து
x
தினத்தந்தி 31 July 2020 12:12 PM GMT (Updated: 31 July 2020 12:12 PM GMT)

மோடி அரசின் பொருளாதார மேலாண்மை முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவில் பல்லாயிரம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் அழிந்துவிடும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், 2019-2020 ஆண்டுகளில் 14 கோடி நபர்கள் வேலை அல்லது வாழ்வாதாரத்தை இழந்தார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தற்போது தொலைதொடர்பு மற்றும் விமானப் போக்குவரத்து ஆகிய இரண்டு துறைகளில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரண்டு துறைகளும் குலைந்தால் இன்னும் பல்லாயிரம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் அழிந்துவிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள அவர், இதையெல்லாம் பார்த்துக்கொண்டு மோடி அரசு செயலிழந்து நிற்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மோடி அரசின் பொருளாதார மேலாண்மை முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது என்பதை தான் பல நாட்களாகச் சொல்லிவருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், “மோடி அரசிடம் திட்டமும் இல்லை, தம் மேலாண்மை தோல்வியடைந்தது என்று ஒப்புக்கொள்ளும் பணிவும் இல்லை, திறமையானவர்களின் உதவியை நாட வேண்டும் என்ற அணுகுமுறையும் இல்லை” என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

Next Story