தேசிய செய்திகள்

கேரளாவில் மேலும் 1,310 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதி + "||" + Kerala reports 1,310 COVID-19 cases; 3 deaths takes toll to 73

கேரளாவில் மேலும் 1,310 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதி

கேரளாவில் மேலும் 1,310 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் இன்று மேலும் 1,310 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

கேரள சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கேரள மாநிலத்தில் இன்று புதிதாக 1,310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 23,607 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு இதுவரை 73 பேர் உயிரிழந்துள்ளனர். 

இன்று வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 48 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 54 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கும் உறுதியாகி உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இன்று 864 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளநிலையில், இதுவரை 13,027 நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 10,495 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 22,279 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தற்போது வரை, மொத்தம் 7,76,268 மாதிரிகள் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன,

தற்போது மாநிலம் முழுவதும் 1,43,323 பேர், வீடு அல்லது முகாம்களில் தனிமைப்படுத்தலில் 1,33,151 பேர் மற்றும் மருத்துவமனைகளில் 10,172 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 1,292 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் மேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா
தமிழகத்தில் நேற்று மதுரை மேற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணன், குளித்தலை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ராமர் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
2. கேரளாவில் இன்று மேலும் 1,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - அமைச்சர் கே.கே.சைலஜா
கேரளாவில் இன்று மேலும் 1,211 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்துள்ளார்.
3. மூணாறு அருகே நிலச்சரிவில் சிக்கி பலியான மேலும் 10 தமிழர்களின் உடல்கள் மீட்பு-பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு
மூணாறு அருகே, நிலச்சரிவில் சிக்கி பலியான மேலும் 10 தமிழர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இதன் மூலம் சாவு எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
4. கேரளாவில் விமான விபத்து; நிலச்சரிவு சம்பவம்: எடப்பாடி பழனிசாமி, அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற விமான விபத்துக்கு எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
5. கேரளாவில் மேலும் 1,195 பேருக்கு கொரோனா பாதிப்பு
கேரளாவில் இன்று மேலும் 1,195 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.