கேரள தங்கக் கடத்தல் வழக்கு - ஸ்வப்னா சுரேஷூக்கு ஆக.21 வரை நீதிமன்றக் காவல்


கேரள தங்கக் கடத்தல் வழக்கு - ஸ்வப்னா சுரேஷூக்கு ஆக.21 வரை நீதிமன்றக் காவல்
x
தினத்தந்தி 1 Aug 2020 7:18 AM GMT (Updated: 1 Aug 2020 7:18 AM GMT)

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷூக்கு ஆக.21 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.   தங்க கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரன் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியாகின. இதையடுத்து அவரிடம் ஏற்கனவே சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் தற்போது என்ஐஏ அதிகாரிகளின் விசாரணை வளையத்திற்குள் சிவசங்கரன் உள்ளார். 

இந்த விவகாரத்தில் முக்கிய புள்ளிகளான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரில் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நேரில் அழைத்து சென்று சோதனை நடத்தினர்.

இந்நிலையில் கேரள தங்கக்கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷூக்கு ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நீதிமன்றக்காவல் விதித்து என்.ஐ.ஏ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்வப்னா சுரேஷூக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்ட பிறகு எர்ணாகுளம் மாவட்ட சிறையில் அடைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.


Next Story