விமான எரிபொருள் விலை 3 சதவீதம் உயர்வு


விமான எரிபொருள் விலை 3 சதவீதம் உயர்வு
x
தினத்தந்தி 2 Aug 2020 2:46 AM GMT (Updated: 2 Aug 2020 2:46 AM GMT)

விமான எரிபொருள் விலை 3 சதவீதம் உயர்ந்தது.

புதுடெல்லி,

சர்வதேச விலை நிலவரம் மற்றும் அன்னிய செலாவணி வீதம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மாதந்தோறும் 1 மற்றும் 16-ந்தேதிகளில் விமான எரிபொருள் விலை மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி நேற்று இதன் விலை திருத்தியமைக்கப்பட்டது.

இதில் இந்த முறையும் விமான எரிபொருள் விலை 3 சதவீதம் உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.1,304.25 அதிகரித்து ரூ.43,932.53 என நேற்று உயர்ந்தது. விமான எரிபொருள் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தொடர்ந்து 5-வது முறையாக அதிகரித்து இருக்கிறது. இதில் அதிக அளவாக ஜூன் 1-ந்தேதி 56.6 சதவீதம் அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

விமான எரிபொருள் விலை உயர்ந்தாலும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. இதில் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் மாற்றியமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Next Story