இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17.50 லட்சமாக உயர்வு


இந்தியாவில்  கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17.50 லட்சமாக உயர்வு
x
தினத்தந்தி 2 Aug 2020 4:24 AM GMT (Updated: 2 Aug 2020 4:24 AM GMT)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54, 736- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. கொரோனா தொற்று பரவலை விரைவாக கண்டறியும் வகையில், பரிசோதனைகளையும் இந்தியா அதிகரித்துள்ளது. உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்த படியாக இந்தியாவில் தான் அதிக பரிசோதனைகள் செய்யப்படுகின்றது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,736-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 853-பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,50,724 ஆக உள்ளது. அதேபோல், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37,364 ஆக உள்ளது. 

கொரோனா தொற்று பாதிப்புடன் இன்றைய நிலவரப்படி 5,67,730 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11,45,630-பேர் தொற்றில் இருந்து இதுவரை குணமடைந்துள்ளனர். 

Next Story