தேசிய செய்திகள்

கொரோனா தொற்று பாதிப்பால் உத்தர பிரதேசத்தில் மந்திரி உயிரிழப்பு + "||" + Uttar Pradesh’s Kamla Rani, minister in Yogi Adityanath cabinet, dies of Covid-19

கொரோனா தொற்று பாதிப்பால் உத்தர பிரதேசத்தில் மந்திரி உயிரிழப்பு

கொரோனா தொற்று பாதிப்பால் உத்தர பிரதேசத்தில் மந்திரி  உயிரிழப்பு
கொரோனா தொற்று பாதிப்பால் உத்தர பிரதேசத்தில் கேபினட் மந்திரி உயிரிழந்தார்.
லக்னோ,

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்நயாத் தலைமையிலான மந்திரி சபையில் தொழில்துறை கல்வி  அமைச்சராக இருந்தவர் கமல் ராணி வருண். 62 வயதான இவருக்கு கடந்த மாதம் 18 ஆம் தேதி கொரோனா தொற்று வைரஸ் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

எனினும், அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு தீவிரம் அடைந்தே காணப்பட்டது. நுரையிரலில் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, அவருக்கு உயிர்காக்கும் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் கடும் முயற்சிகள் எடுத்த போதிலும் சிகிச்சை பலனின்றி இன்று கமல் ராணி வருண் உயிரிழந்தார். 

மந்திரி கமல் ராணி வருண் உயிரிழப்பு குறித்து வருத்தம் தெரிவித்துள்ள உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50,129- பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50 ஆயிரத்து 129-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கொரோனா தொற்று; டெல்லியில் 34 நாட்களில் இல்லாத அளவுக்கு அதிக பாதிப்பு
டெல்லியில் 34 நாட்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிக எண்ணிக்கையில் பதிவாகி உள்ளன.
3. உ.பி.யில் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலி: கொலை வழக்கில் பா.ஜனதா பிரமுகர் கைது
தேடப்பட்டு வந்த பா.ஜனதா பிரமுகர் திரேந்திர பிரதாப்சிங் நேற்று லக்னோவில் கைது செய்யப்பட்டார்.
4. பத்திரிகை வாசிப்பது மிகவும் பாதுகாப்பானது- செய்தித்தாள் மூலம் கொரோனா வைரஸ் பரவாது: மத்திய மந்திரி ஹர்சவர்தன் திட்டவட்டம்
செய்தித்தாள் மூலமாக கொரோனா வைரஸ் பரவுவதற்கான அறிவியல்பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை. இந்த கொரோனா தொற்று காலகட்டத்தில் பத்திரிகை வாசிப்பது மிகவும் பாதுகாப்பானது என்று மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
5. கொரோனா நோயாளிகளுக்கு 2-வது முறை தொற்று வந்தால் பாதிப்பு அதிகம்- விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
முதல் முறை கொரோனா பாதித்தபோது கிடைத்த நோய் எதிர்ப்பு சக்தியால், மீண்டும் கொரோனா ஏற்படாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்பதாகும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.