கேரள தங்க கடத்தல் வழக்கு: மத்திய மந்திரி முரளிதரன் உண்ணாவிரத போராட்டம்


கேரள தங்க கடத்தல் வழக்கு:  மத்திய மந்திரி முரளிதரன் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 2 Aug 2020 11:16 PM GMT (Updated: 2 Aug 2020 11:16 PM GMT)

கேரள தங்க கடத்தல் வழக்கு விவகாரத்தில் மத்திய மந்திரி முரளிதரன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தைப் பயன்படுத்தி 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் அந்த மாநில அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் முதல்-மந்திரி அலுவலகத்துக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகளான பா.ஜ.கவும், காங்கிரஸ் கட்சியும் கடுமையாகக் குற்றம் சாட்டி வருகின்றன.

மேலும் இந்த விவகாரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக பா.ஜ.க. மூத்த தலைவரும் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரியுமான முரளிதரன், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் நேற்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் “தங்க கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு பயங்கரவாத தொடர்புகள் இருப்பதாக சுங்க இலாகா அறிக்கைகள் காட்டுகின்றன. எனவே தேசவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு தனது அலுவலகத்தை வழங்கியதன் மூலம் முதல்-மந்திரி நாட்டிற்கு துரோகம் இழைத்து உள்ளார் எனவே அவர் ராஜினாமா செய்ய வேண்டு” எனக் கூறினார்.

Next Story