"கேரளாவில் வியாழக்கிழமை வரை கனமழை பெய்யக்கூடும்" - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


கேரளாவில் வியாழக்கிழமை வரை கனமழை பெய்யக்கூடும் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 3 Aug 2020 10:14 AM GMT (Updated: 3 Aug 2020 10:14 AM GMT)

கேரளாவில் வியாழக்கிழமை வரை கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் மழை பெய்து வருகிரது .

இந்நிலையில் கேரளா மாநிலத்தில்  இன்று முதல் வியாழக்கிழமை வரை கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதையடுத்து, இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு  இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்யும் என்றும் நாளை ஒன்பது மாவட்டங்களுக்கு  ஆரஞ்சு எச்சரிக்கையும் ஐந்து மாவட்டங்களுக்கு  மஞ்சள் எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் பேரிடர் மேலாண்மை குழுக்கள் மாநிலம் முழுவதும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


Next Story