தேசிய செய்திகள்

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு முன் வலியில்லா மரணத்திற்கு மருந்து தேடி உள்ளார் - போலீஸ் கமிஷனர் + "||" + Sushant Singh Rajput searched for 'painless death', 'bipolar disorder' on Google: Mumbai Police Commissioner

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு முன் வலியில்லா மரணத்திற்கு மருந்து தேடி உள்ளார் - போலீஸ் கமிஷனர்

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு முன் வலியில்லா மரணத்திற்கு மருந்து தேடி உள்ளார் - போலீஸ் கமிஷனர்
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு முன் கூகுளில் வலியில்லா மரணத்திற்கு மருந்து தேடி உள்ளார் என மும்பை போலீஸ் கமிஷனர் கூறி உள்ளார்.
மும்பை

மும்பை போலீஸ் கமிஷனர் சிங் செய்தியாளர்கள்  கூட்டத்தில் பேசும் போது கூறியதாவது:- 

பீகார் போலீஸ் எப்.ஐ.ஆர், சுஷாந்தின் கணக்கிலிருந்து ரூ.15 கோடி மோசடி செய்ததாக கூறுகிறது.ஆனால் விசாரணையி ​​அவரது வங்கி கணக்கில் 18 கோடி ரூபாய் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம், அதில் சுமார் 4.5 கோடி ரூபாய் இன்னும் உள்ளது. இதுவரை ரியா சக்ரபோர்த்தியின் கணக்கிற்கு நேரடி பரிமாற்றம் எதுவும் நடைபெறவில்லை. நாங்கள் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.

இதுவரை 56 பேரின் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, தற்கொலை நிகழ்ந்தது தொழில்முறை போட்டி, நிதி விவகாரம் அல்லது உடல்நலம் என அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம்.

சுஷாந்தின் டூப்ளக்ஸ் பிளாட்டை மும்பை காவல்துறை ஜூன் 14 அன்றே சீல் வைத்து விட்டது. அடுத்த நாள் (ஜூன் 15), தடயவியல் குழுக்கள் மற்றும் மருத்துவர்கள் அந்த பிளாட்டை பார்வையிட்டு அங்கு விசாரணைகளை முடித்தனர், அதன் பிறகுதான் அந்த பிளாட் சீல் வைக்கப்படவில்லை.

சுஷாந்த் மன அழுதத்தால் பாதிக்கப்பட்டு இருந்தார் அவர் அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். அதற்கான மருந்துகளை எடுத்துக்கொண்டு இருந்தார். தற்கொலைக்கு முன் கூகுளில் வலியில்லா மரணம் மற்றும் மன அழுத்தத்திற்கு அவர் மருந்து தேடி உள்ளார். அவரது மரணத்திற்கு என்ன சூழ்நிலைகள் வழிவகுத்தன என்பது குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்.

விசாரணையின் போது எந்த அரசியல்வாதியின் பெயரும் வரவில்லை. எந்தவொரு கட்சியைச் சேர்ந்த எந்த அரசியல்வாதிக்கும் எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. உத்திரமேரூர் அருகே கடன் தொல்லையால் லாரி உரிமையாளர் தற்கொலை
உத்திரமேரூர் அருகே கடன் தொல்லையால் லாரி உரிமையாளர் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
2. திருவொற்றியூரில் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை
திருவொற்றியூரில் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
3. திருவொற்றியூரில் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை
திருவொற்றியூரில் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
4. ஆறுமுகநேரியில் பரிதாபம் லாரி உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை
கொரோனா வைரஸ் தாக்கத்தால், லாரி தொழில் முடங்கியதால் மனமுடைந்த லாரி உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
5. ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வியாபாரி தீக்குளித்து தற்கொலை
வில்லியனூர் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வியாபாரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.