கொரோனாவின் கோரப்பிடியில் கர்நாடகம்: இன்று புதிதாக 4,752 பேருக்கு தொற்று உறுதி


கொரோனாவின் கோரப்பிடியில் கர்நாடகம்: இன்று புதிதாக 4,752 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 3 Aug 2020 2:27 PM GMT (Updated: 3 Aug 2020 2:27 PM GMT)

கர்நாடகாவில் இன்று புதிதாக 4,752 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தினமும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரசால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் உயிரிழப்பும் தினமும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கர்நாடக சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, கர்நாடகாவில் இன்று மேலும் 4,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,39,571 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இன்று 98 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,594 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 4,776 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 62,500 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் தற்போது வரை 74,469 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த இரு தினங்களாக 5 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு இன்று 4 ஆயிரத்திற்கு குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story