இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 2 கோடியை கடந்தது


இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 2 கோடியை கடந்தது
x
தினத்தந்தி 3 Aug 2020 5:08 PM GMT (Updated: 3 Aug 2020 5:08 PM GMT)

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை உறுதி செய்வதற்காக நடத்தப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை 2 கோடியை கடந்துள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், குணமடைந்தோர் விகிதம் அதிகரித்து வருகிறது என ஆறுதல் அளிக்கும் வகையில் செய்தி வெளியாகி வருகிறது.  இந்த நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் 52,972 கொரோனா பாதிப்புகள் இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளன.  இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18 லட்சத்து 3 ஆயிரத்து 696 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்து உள்ளது.

இதுவரை 11 லட்சத்து 86 ஆயிரத்து 203 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.  5 லட்சத்து 79 ஆயிரத்து 357 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இன்று ஒரு நாளில் 771 பேர் பலியாகி உள்ளனர்.  இதனால், பலி எண்ணிக்கை 38 ஆயிரத்து 135 ஆக உயர்ந்து உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.

இதேபோன்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இன்று வெளியிட்ட செய்தியில், நாட்டில் ஆகஸ்டு 2ந்தேதி வரையில் 2 கோடியே 2 லட்சத்து 2 ஆயிரத்து 858 கொரோனா பாதிப்புகளுக்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.  இவற்றில் நேற்று ஒரு நாளில் 3 லட்சத்து 81 ஆயிரத்து 27 பரிசோதனைகள் நடந்துள்ளன என்று தெரிவித்து உள்ளது.

Next Story