தேசிய செய்திகள்

காஷ்மீரில் ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் கடத்தல்? தேடுதல் வேட்டை தீவிரம் + "||" + Soldier Missing In Kashmir's Kulgam Likely Kidnapped By Terrorists: Army

காஷ்மீரில் ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் கடத்தல்? தேடுதல் வேட்டை தீவிரம்

காஷ்மீரில் ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் கடத்தல்? தேடுதல் வேட்டை தீவிரம்
காஷ்மீரில் ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததையடுத்து தேடுதல் வேட்டையில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரீநகர்,

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டம் ரம்பாமா பகுதியில் வாகனம் ஒன்று நேற்று முன்தினம் தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தது. அந்த வாகனம், சோபியான் மாவட்டத்தை சேர்ந்த முசாபர் மன்சூர் என்பவரது பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர் பிராந்திய படையில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தவர். அவரையும் காணவில்லை.


எனவே அவர் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரை தேடும் பணியில் ராணுவ வீரர்களும், போலீசாரும் ஈடுபட்டு உள்ளனர்.